வங்கக்கடலில் உருவான அதிதீவிர புயலான ‘மோந்தா’ (Montha), நேற்று நள்ளிரவுக்கு பிறகு ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (அக்டோபர் 29, 2025) அதிகாலை அறிவித்துள்ளது.
கரையை கடக்கும்போதே ‘மோந்தா’ புயலின் தீவிரம் படிப்படியாக குறைந்து தற்போது சாதாரண புயலாக (Cyclonic Storm) வலுவிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மோந்தா’ புயல் வலுவிழந்தாலும், அதன் தாக்கம் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
புயலின் தாக்கத்தினால், தமிழகம், தெலுங்கானா, ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளது.
‘மோந்தா’ புயல் ஆந்திராவில் கரையை கடந்தது! தமிழகத்தில் மழை நீடிக்குமா?
