பயணிகளின் வசதிக்காகவும், ரயில்களின் இயக்க திறனை மேம்படுத்தவும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் உள்ளிட்ட 7 முக்கிய ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
புதிய கால அட்டவணையின்படி, கீழ்க்கண்ட வந்தே பாரத் ரயிலில் குறிப்பிட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:
சென்னை – நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: தற்போது, எழும்பூரில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலியை இரவு 10.30 மணிக்கு சென்றடையும் இந்த ரயில், வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் மதியம் 3.05 மணிக்கு எழும்பூரிலிருந்து புறப்படும். திருநெல்வேலிக்கு இரவு 10.40 மணிக்குச் சென்றடையும்.
ஜனவரி 1 முதல் வந்தே பாரத் உள்ளிட்ட 7 ரயில்களின் நேரம் மாற்றம்
