கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணி, பரளி ஆறுகளின் கரயோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வந்த நிலையில் பேச்சிப்பாறை , பெரஞ்சாணி அணைகள் நிரம்பி வருகிறது.
இதன் காரணமாக தாமிரபரணி, கோதையாறு மற்றும் பரளியாறு ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் மழை தொடர்வதால் தாமிரபரணி, பரளி ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.