தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக குறைந்த நிலையில் இன்றைய விலை நிலவரம் எப்படி இருக்குமோ என இல்லத்தரசிகள் திகிலுடன் காத்திருந்த நிலையில், தங்கம் விலை இன்றும் குறைந்தது.
சென்னையில் நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,400 குறைந்து ஒரு பவுன் ரூ.93,600- க்கு விற்பனையானது . அதன் தொடர்ச்சியாக பிற்பகலில் கிராமுக்கு ரூ.160-ம், பவுனுக்கு ரூ.1,280-ம் குறைந்தது.
இந்த நிலையில், தங்கம் விலை 2-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. அதன்படி, பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.92,000-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.11,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் மீதான முதலீடு குறைந்ததன் எதிரொலியாக அதன் விலை சரிவை சந்தித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் மளமளவென குறைந்து வருகிறது. கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரமும் குறைந்து ஒரு கிராம் ரூ.174-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
