சீன ஊடகக் குழுமம் நடத்தும் “நாகரிக பயணம்” என்ற கண்காட்சியின் துவக்க விழா ஜூன் 29ஆம் நாள் ஐ.நாவின் தலைமையகத்தில் நடைபெற்றது. இக்கண்காட்சி ஜுன் 29 முதல் ஜுலை 7ஆம் நாள் வரை நடைபெறுகின்றது.
சீன நாகரிகத்தைப் பரவல் செய்வது, சர்வதேச மனித மற்றும் பண்பாட்டு பரிமாற்றத்தை வலுப்படுத்துவது, உலக நாகரிகங்களுக்கிடையிலான தொடர்பை முன்னேற்றுவது ஆகியவை இக்கண்காட்சியின் நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அதன் உலகாவிய கண்காட்சி ஜுன் முதல் நவம்பர் வரை, அமெரிக்கா, பிரிட்டன், எகிப்து, கென்யா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் அடுத்தடுத்து நடைபெறும்.