கார்த்திகை தீபத் திருவிழா – பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Estimated read time 1 min read

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

காலை முதலே மலைக்கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மாலை 6 மணியளவில் மலைக்கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், மாலை 6 மணி வரை மலைக்குச் செல்லும் படிப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் 160-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கார்த்திகை தீபத்தையொட்டி பழனி மலைக்கோயில் மற்றும் அடிவாரப் பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author