நான்ஜிங்கில் 5ஆவது சீன-ஸ்விட்சர்லாந்து வெளியுறவு அமைச்சர்கள் நிலை நெடுநோக்குப் பேச்சுவார்த்தை

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ நவம்பர் 23ஆம் நாளில், சீனாவின் நான்ஜிங்கில், ஸ்விட்சர்லாந்து கூட்டாட்சித் துணை தலைவரும் வெளியுறவு அமைச்சருமான கேசிஸுடன் இணைந்து, 5ஆவது சீன-ஸ்விட்சர்லாந்து வெளியுறவு அமைச்சர்கள் நிலை நெடுநோக்குப் பேச்சுவார்த்தையை நடத்தினார்.

அப்போது வாங்யீ கூறுகையில், இரு நாட்டுத் தலைவர்களின் வழிகாட்டலின் கீழ், இரு தரப்புறவு, சீன-ஐரோப்பிய உறவில் முன்னணியில் உள்ளது. இரு தரப்புறவின் முன்னேற்றங்கள், சீனாவின் தூதாண்மை கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளன. ஸ்விட்சர்லாந்து தரப்புன் சேர்ந்து, இரு நாட்டுத் தலைவர்களின் ஒத்த கருத்துகளை சீராக செயல்படுத்தி, பல்வேறு துறைகளிலான பரிமாற்றத்தை அதிகரித்து, உயர் நிலை பரஸ்பர அரசியல் நம்பிக்கையை ஆழமாக்க சீனா விரும்புவதாக தெரிவித்தார்.

சீனாவும் ஐரோப்பாவும் பேச்சுவார்த்தையின் மூலம் சர்ச்சையைச் சீராகக் கையாள வேண்டும். சீன-ஐரோப்பிய பொருளாதர மற்றும் வர்த்தகச் சர்ச்சையைத் தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமாகப் பங்காற்ற வேண்டும் என்றும் வாங்யீ வலியுறுத்தினார்.

கேசிஸ் கூறுகையில், சீனாவுடன் இணைந்து, தாராள வர்த்தகத்தைப் பேணிக்காத்து, பாதுகாப்புவாதத்தை எதிர்த்து, காலநிலை மாற்றத்தைச் சமாளித்து, செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய மேலாண்மையை வலுப்படுத்தி, திறப்பு மற்றும் முன்னேற்றங்கள் வாய்ந்த உலகத்தைக் கூட்டாகக் கட்டியமைக்க ஸ்விட்சர்லாந்து விரும்புவதாக தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author