17ஆவது சீன-யி.யூ பொருளாதாரம் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தை பெய்ஜிங்கில் தொடக்கம்

17ஆவது சீன-ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரம் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தை 23ஆம் நாள் பெய்ஜிங்கில் தொடங்கியது. ஒட்டுமொத்த பொருளாதார நிலைமை மற்றும் கொள்கைகள், ஜி 20 கட்டுக்கோப்பில் பல தரப்பு ஒத்துழைப்புகள் முதலியவை குறித்து இதில் ஆழமாக விவாதிக்கப்பட்டுள்ளன.

சீன துணை நிதி அமைச்சர் லியௌமின், ஐரோப்பிய ஆணையத்தின் பொருளாதாரம் மற்றும் நிதி விவகாரப் பிரிவின் தலைவர் வேர்வ் ஆகிய இருவரும் இப்பேச்சுவார்த்தையைக் கூட்டாக தலைமை தாங்கினர்.

இதில் லியௌமின் கூறுகையில், தற்போதைய நிலைமை பின்னணியில், சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் உண்மையான பல தரப்புவாதத்தைப் பேணிக்காத்து நடைமுறைப்படுத்த வேண்டும். திறப்பு தன்மை வாய்ந்த உலகளாவிய பொருளாதாரக் கட்டுமானத்தை விரைவுபடுத்தி, உலகப் பொருளாதாரத்திற்கு மேலதிகமான நிலைத் தன்மையைக் கொண்டு வர வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து, ஒன்றுக்கு ஒன்று திறப்பு அளவை விரிவாக்கி, பொருளாதாரத் துறையில் இரு தரப்பு ஒத்துழைப்பின் நியாயமான வளர்ச்சியை நனவாக்க சீனா விரும்புகிறது. மேலும், சந்தைப் பொருளாதாரம் மற்றும் நியாயமான போட்டி என்ற கோட்பாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மதிப்பளித்து, சீனாவின் நிறுவனங்களுக்கு நியாயமான, நேர்மையான தொழில்களை நடத்தும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி கூறுகையில், இரு தரப்பும் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து,  ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை வலுப்படுத்தி, சமத்துவம் மற்றும் பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, சர்ச்சைகளைச் சரியாகக் கையாண்டு, இரு தரப்புப் பொருளாதாரம் இயங்கி வருவதை ஒழுங்காக முன்னேற்ற ஐரோப்பிய ஒன்றியம் விரும்புவதாக தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author