ஈரானில் 81,000 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாக டிரம்ப் அதிர்ச்சி தகவல்…! “கடைசியில் அமெரிக்காதான் வெல்லும்” என அதிரடியாகப் பேசிய அமெரிக்க அதிபர்… ஜனநாயகக் கட்சி மீதும் சரமாரி குற்றச்சாட்டு…!! 

Estimated read time 1 min read

ஈரானில் இதுவரை 81 ஆயிரம் போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஒரு வாரத்தில் ஈரான் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்ததாகவும், ஜனநாயகக் கட்சி முன்னிலை பெற்றதாகவும் கூறப்படும் நிலையில், தேர்தலுக்கு முன்பே தான் இரண்டு விஷயங்களைக் கணித்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றால் பங்குச்சந்தை சரிவைச் சந்திக்கும் என்றும், ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தும் என்றும் கூறியிருந்ததாகவும், தற்போது அவை நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த ஒரு வாரத்தில் ஈரான் அதிக ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் ஏவியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அவை அனைத்தும் அமெரிக்காவின் பாதுகாப்புப் படைகளால் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும், இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும், ஈரான் கொன்றதாக அவர் குறிப்பிட்டுள்ள 81 ஆயிரம் பேர் என்ற எண்ணிக்கைக்கு ஆதாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் இல்லை. மனித உரிமை அமைப்புகளின் கணக்குகளும் இதைவிடக் குறைவாகவே உள்ளன.

தொடர்ந்து பேசிய டிரம்ப், ஈரான் தலைவர்கள் ஜனநாயகக் கட்சியினரைப் பலவீனமானவர்கள் என்றும், நாட்டைச் சீரழிப்பவர்கள் என்றும் கருதுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஜனநாயகக் கட்சியும் ஈரானும் எண்ணெய் விலையை உயர்வாக வைத்திருக்க முயன்றதாகவும், தேர்தலுக்குப் பிறகு எண்ணெய் விலை கடுமையாகக் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இறுதியில், இந்த விவகாரத்தில் அமெரிக்காவே வெற்றி பெறும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author