கைக்குழந்தையைக் கையில் ஏந்தியபடியே நாடாளுமன்றத்தில் பேச்சு….‌  

Estimated read time 1 min read

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் அவைக்கு வந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாதிமா பேமன் இவ்வாறு குழந்தையுடன் அவைக்கு வந்து பணியாற்றியது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வரலாற்றில், பதவிக் காலத்தில் குழந்தை பெற்ற முதல் உறுப்பினர் என்ற பெருமையை ஃபாதிமா பேமன் பெற்றுள்ளார். அவருக்குக் கடந்த மே மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

குழந்தை பிறந்த பிறகும் தனது மக்கள் பணியில் தொய்வு ஏற்படக் கூடாது என்பதற்காக, அவர் தனது கைக்குழந்தையைக் கையில் ஏந்தியபடியே நாடாளுமன்ற அவைக்கு வந்துள்ளார். தாய்ப்பாசத்தையும் மக்கள் பிரதிநிதி என்ற பொறுப்பையும் அவர் ஒரே நேரத்தில் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்தபடியே அவர் முக்கிய விவாதங்களில் பங்கேற்றுப் பேசியுள்ளார். இந்தக் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.

“>

தனது குடும்பப் பொறுப்பையும் தாண்டி, நாடாளுமன்ற உறுப்பினராக அவர் காட்டிய இந்த அர்ப்பணிப்பையும் கடமை உணர்ச்சியையும் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author