ஜெனீவாவில் சீனாவுக்கான ஏற்றுமதித் திறன் மேம்பாட்டு அறிக்கை பற்றிய சர்வதேசக் கருத்தரங்கு நவம்பர் 25ஆம் நாள் முற்பகல் ஜெனீவாவில் நடைபெற்றது.
சீனச் சர்வதேச வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கான பிரதிநிதியும் துணை வணிக அமைச்சருமான லீ சேங்காங், ஐ.நாவின் வர்த்தக மற்றும் வளர்ச்சி மாநாட்டின் தற்காலிகச் செயலாளர் மொரெனோ முதலியோர் இதில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.
லீ சேங்காங் இதில் கூறுகையில், இறக்குமதியைச் சீனா தொடர்ந்து விரிவாக்கி வருவதோடு, உலகத்துடன் இணைந்து, சீனாவின் பெரிய சந்தையையும் வளர்ச்சி வாய்ப்புகளையும் பகிர்ந்துகொண்டு வருகிறது. சீனாவுக்கான ஏற்றுமதி பற்றிய நடவடிக்கைகளைச் சீனா தொடங்கிய ஓராண்டில், சீனாவுக்கு பல்வேறு நாடுகளின் உயர் தர உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றியுள்ளது என்று தெரிவித்தார்.
மொரெனோ பேசுகையில், சீனா, உலகின் முக்கிய இறக்குமதி சந்தையாக விளங்குவதாகக் குறிப்பிட்டதோடு, ஐ.நாவின் வர்த்தக மற்றும் வளர்ச்சி மாநாடு சீனாவுடன் இணைந்து, ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, அனைவரையும் உள்ளடக்கிய தொடரவல்ல வளர்ச்சியைக் கூட்டாக ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்தார்.
