சீனப் பண்பாட்டு ஆற்றல் வலுப்படுத்துதல் பற்றிய மன்றத்தின் 2025ஆம் ஆண்டு கூட்டம் மே 26ஆம் நாள் குவாங்துங் மாநிலத்தின் ஷேன்ச்சென் நகரில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், மத்திய கமிட்டி பரப்புரைத் துறை அமைச்சருமான லீஷூலெய் இக்கூட்டத்தின் துவக்க விழாவில் பங்கேற்றி முக்கிய உரை நிகழ்த்தினார்.
பண்பாடு மற்றும் அறிவியலுடனான ஒன்றிணைப்பை முன்னேற்றி பண்பாட்டு எண்ணியல்மயமாக்க நெடுநோக்கை ஆழமாக நடைமுறைப்படுத்த வேண்டும். திறப்பு மற்றும் உள்ளடக்கத் தன்மையுடன் கூடிய மனப்பான்மையை நிலைப்படுத்த வேண்டும்.
உலக நாகரிக முன்மொழிவின் நடைமுறையாக்கத்தை ஆழப்படுத்த வேண்டும். பண்பாட்டுத் துறையின் திறப்பு மற்றும் ஒத்துதழைப்பை முன்னேற்றி விதவிதமான நாகரிகங்களுக்கிடையே உள்ள பரிமாற்றங்களை ஆழப்படுத்த வேண்டும் என்று இதில் கலந்து கொண்ட விருந்தினர்கள் பலர் தெரிவித்தனர்.