முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே எழுதிய வெளியிடப்படாத புத்தகம் ஒன்று விநியோகிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்குக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.
‘Four Stars of Destiny’ என்ற புத்தகம் , தகுதிவாய்ந்த அதிகாரிகளின் கட்டாய அனுமதியின்றி பகிரப்பட்டதாக கூறப்படுகிறது.
FIR குறித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காந்தி, நரவனேவின் பழைய ட்வீட்டை சுட்டிக்காட்டினார்.
அதில், “வணக்கம் நண்பர்களே, எனது புத்தகம் இப்போது கிடைக்கிறது; இணைப்பை பின்தொடரவும். மகிழ்ச்சியான வாசிப்பு!” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
நரவானே பொய் சொல்வாரா? பென்குயின் பொய் சொல்கிறதா?: புத்தக சர்ச்சை குறித்து ராகுல்
