ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சார்பில் வழங்கப்படும் பரிசுத்தொகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணிக்கு ரூ.21 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தத் தகவலை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ (முன்பு ட்விட்டர்) பக்கத்திலும் வெளியிட்டுள்ளது.
ஆசிய கோப்பை சாம்பியன் இந்திய அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசுத்தொகை!

Estimated read time
1 min read