2030ஆம் ஆண்டுக்கான சீனப் பால் தொழிலின் இலக்குகள் எனும் அறிக்கையைச் சீனப் பால் தொழில் சங்கம் 14ஆம் நாள் வெளியிட்டது.
இதில் 2030ஆம் ஆண்டில் பால் தொழிலின் நவீனமயமாக்கத்தைப் பன்முகங்களிலும் மேம்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பால் உற்பத்தி தன்னிறைவு விகிதம் 70விழுக்காட்டுக்கு மேல் நிலைப்படுத்த வேண்டும். பசுவுக்கான ஆண்டு சராசரி பால் உற்பத்தி 10டன்னைத் தாண்ட வேண்டும். பால் உற்பத்திப் பொருட்களின் கண்காணிப்புக்கான தகுதி விகிதம் 99விழுக்காட்டுக்கு மேல் நிலைநிறுத்த வேண்டும். பால் தொழிலின் பசுமை உற்பத்திக்கான முழு காரணி உற்பத்தித்திறன் குறிப்பிட்ட அளவில் உயர்த்த வேண்டும் முதலியவை இவ்வறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், உயர் உற்பத்தி அளவு, சிறந்த தரமுடன் கூடிய புதிய தீவனப் புல் வகையை வளர்க்க வேண்டும். பசுக்களின் இனப்பெருக்க அமைப்பு முறையை நவீனப்படுத்த வேண்டுமென்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.