6ஆவது சீன-ஜெர்மனி உயர் நிலைப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை, உள்ளூர் நேரப்படி நவம்பர் 24ஆம் நாள், ஜெர்மனியின் தலைநகர் பெர்லின்னில் நடைபெற்றது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், மத்திய அரசியல் மற்றும் சட்ட விவகாரப் பணிக் கமிட்டியின் செயலாளருமான சென் வென்சிங், ஜெர்மனியின் தலைமையமைச்சர் மாளிகை அமைச்சர் வால்டென் ஆகிய இருவரும் இதில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினர்.
இதில் சென் வென்சிங் கூறுகையில், இப்பேச்சுவார்த்தை முறைமையானது, பாதுகாப்பு துறையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் ஜெர்மனி தலைவர்களுக்கிடையில் ஒத்தக் கருத்துகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றியுள்ளது என்றார்.
மேலும், ஜெர்மனியுடன் இணைந்து, பயனுள்ள ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, கூட்டு அபாயம் மற்றும் அறைகூவல்களைச் சமாளித்து, நீண்டகாலமான அமைதி, பொதுப் பாதுகாப்புடன் கூடிய உலகத்தை உருவாக்குவதற்கு மேலும் முக்கியப் பங்காற்ற சீனா விரும்புவதாகவும் தெரிவித்தார்.
