சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 8ஆம் நாள் முதல் 9ஆம் நாள் வரை பெய்ஜிங் மாநகரில் நடைபெற்ற சுற்றுப்புற நாடுகள் குறித்து கூட்டத்தில் கலந்துகொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார். சுற்றுப் புற நாடுகளுடன் இணைந்து ஒரு பொது சமூக எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
புதிய யுகத்தில், சீனாவின் சுற்றுப் புற நாடுகள் தொடர்புடைய பணிகள் பெற்றுள்ள சாதனைகள் மற்றும் அனுபவங்களை அவர் தொகுத்துக் கூறினார்.
இது தொடர்பான நிலைமை குறித்து அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்து, எதிர்வரும் காலக்கட்டத்தில் சுற்றுப்புற நாடுகள் தொடர்பான வெளியுறவுப் பணிகளின் இலக்குகள், கடமைகள் மற்றும் நடவடிக்கைகளை அவர் உறுதிப்படுத்தி, இப்பணிகளுக்கான புதிய நிலையை உருவாக்க பாடுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.