ஷிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தில் வணிக சூழ்நிலை மேம்பட்டு வருவதுடன், அரசு சாரா தொழில் நிறுவனங்களின் பொருளாதாரம் நாளுக்கு நாள் வலுவடைந்து, ஷிட்சாங் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான முக்கிய ஆற்றலாக மாறியுள்ளது.
2024ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு வரை, ஷிட்சாங்கில் அரசு சாரா தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 23 ஆயிரத்து 900ஐ எட்டி, இப்பிரதேசத்திலுள்ள மொத்த எண்ணிக்கையில் 97.4 விழுக்காடு வகித்துள்ளது.
அத்துடன், அரசு சாரா தொழில் நிறுவனப் பொருளாதாரத்தின் வரி வசூல் வருமானம் 2249.8 கோடி யுவானை எட்டி, இப்பிரதேசத்தின் மொத்த வரி வசூல் வருமானத்தில் 76.25 விழுக்காடு வகித்துள்ளது.
தவிரவும், அரசு சாரா தொழில் நிறுவனங்கள், 80 விழுக்காட்டுக்கும் மேலான வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளன.