19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் கலந்துக் கொள்ள சீனாவுக்கு வருகை தந்த நேபாள தலைமை அமைச்சர் புஷ்பா கமல் தஹால் பிரசந்தாவுடன் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் செப்டம்பர் 23ஆம் நாள் பிற்பகல் ஹாங்சோ நகரில் சந்திப்பு நடத்தினார்.
சீனாவும் நேபாளமும் தலைமுறை தலைமுறையாக நட்பார்ந்த நாடுகளாகும். சமமான சக வாழ்வுக்கான 5 கோட்பாடுகளைப் பின்பற்றி வரும் இவ்விரு நாடுகள், பெரிய நாடு ஒன்று சிறிய நாடு ஒன்றுடன் சமநிலையில் பழகி, ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறுவதற்கான முன்மாதிரியை நிலைநாட்டியுள்ளன.
சீன-நேபாள உறவுக்கு வெகுவாக முக்கியத்துவம் அளித்து வரும் சீனா, நேபாளத்துடன் இணைந்து வளர்ச்சிக்கான நெடுநோக்கு இணைப்பை வலுப்படுத்தி, இருநாட்டு உறவின் வளர்ச்சியை முன்னேற்ற விரும்புவதாக ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.
நேபாளமும் சீனாவும் ஒன்றுக்கு ஒன்று புரிந்துணர்வு மற்றும் ஆதரவு அளிக்கும் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளாகும். நேபாளத்துக்கு தன்னலமற்ற உதவிகளை வழங்கி வரும் சீனாவுக்கு மனமார்ந்த நன்றியை நேபாளம் தெரிவிக்கிறது.
ஒரே சீனா என்ற கொள்கையை நேபாளம் உறுதியுடன் பின்பற்றுகிறது. தைவான் மற்றும் திபெத், சீனாவிலிருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும்.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையை நேபாளம் வெகுவாக பாராட்டுவதோடு இதில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுப்பதாகவும் பிரசந்தா தெரிவித்தார்.