தெ.ஆ அணிக்கெதிரான 5 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

Estimated read time 1 min read

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்திய அணியானது முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று டிசம்பர் 19-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறவுள்ளது.

5 ஆவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் :

இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரினை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி தயாராகி வருகிறது. அதேவேளையில் மற்றொரு புறம் இந்த போட்டியில் வெற்றி பெற்று இரண்டுக்கு இரண்டு (2-1) என்ற கணக்கில் தொடரை சமன் செய்யும் முனைப்புடன் தென்னாப்பிரிக்க அணியும் தயாராகி வருகிறது.

இதன் காரணமாக இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் இந்த கடைசி போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு முக்கிய மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக எஞ்சியுள்ள டி20 தொடரிலிருந்து துணை கேப்டன் சுப்மன் கில் விலகியதால் அவருக்கு பதிலாக இந்த கடைசி போட்டியில் சஞ்சு சாம்சன் துவக்க வீரராக அபிஷேக் சர்மாவுடன் இணைந்து விளையாடுவார் என்று தெரிகிறது. அதனை தவிர்த்து ஜஸ்ப்ரீத் பும்ரா இந்திய அணிக்கு திரும்பியிருந்தாலும் அவருக்கு ஓய்வு வழங்கப்படவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மற்றபடி கடந்த மூன்றாவது போட்டியில் விளையாடிய அதே இந்திய அணியே இந்த இறுதி போட்டியிலும் விளையாடும் என்று தெரிகிறது. அதன்படி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : பதிரனா 18 கோடிக்கு ஒர்த்தில்ல.. நல்லவேளை ரஹ்மானை வாங்கியதால் அவங்க தப்பிச்சாங்க.. ஸ்ரீகாந்த் வெளிப்படை

1) அபிஷேக் சர்மா, 2) சஞ்சு சாம்சன், 3) திலக் வர்மா, 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) ஷிவம் துபே, 7) ஜிதேஷ் சர்மா, 8) ஹர்ஷித் ராணா, 9) அர்ஷ்தீப் சிங், 10) குல்தீப் யாதவ், 11) வருண் சக்கரவர்த்தி.

The post தெ.ஆ அணிக்கெதிரான 5 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ appeared first on Cric Tamil.

Please follow and like us:

You May Also Like

More From Author