சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் மனைவி பெங் லீயுவான் அம்மையாரின் அழைப்பின் பேரில், 2025ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களின் மனைவிகள், செப்டம்பர் முதல் நாள் தியான்ஜின் ஹாய்ஹே ஆற்றுக் காட்சியிடத்தில் பயணம் மேற்கொண்டனர்.
அப்போது பெங் லீயுவான் கூறுகையில், வரலாற்று மற்றும் பண்பாட்டு பாரம்பரியமும், நவீன ஈர்ப்பு ஆற்றலும் தியன்ஜின் மாநகரில் ஒன்றிணைக்கப்படுகின்றன. இந்நகரின் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுப் பல்வகைமையை ஹாய்ஹே ஆறு சாட்சியுரைக்கின்றது என்றார்.
சீனாவின் தலைச்சிறந்த பண்பாட்டுக்கும், சீன நவீனமயமாக்கம் பெற்றுள்ள குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கும் விருந்தினர்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்தனர்.
உஸ்பெகிஸ்தான், மங்கோலியா, அஜர்பைஜான், துருக்கி ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்களின் மனைவிகள் உள்ளிட்ட விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.