சீன தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத்தொடர் பற்றி, வெளியுறவு அமைச்சரின் செய்தியாளர் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, பெரிய நாட்டுறவு, பிரதேச பிரச்சினை, உலக நிர்வாகம் ஆகியவை குறித்து ஆழமாக விளக்கினார்.
அமைதியான வளர்ச்சியில் ஊன்றி நிற்பது, உலக அமைதிக்கு பாடுபடுவது ஆகியவை சீனா உலகிற்கு ஆற்றிய பங்காகும். வளர்ச்சி என்பது அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் சாவியாகும். இது சீனா உலகிற்கான முன்மொழிவு ஆகும். பாதுகாப்புவாதம் குறித்து, திறப்புப் பணியை சீனா உறுதியாக விரிவாக்கி வருகின்றது. தற்போது, சீன பாணியுடைய நவீனமயமாக்கம், மேலதிகமான நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலதிகமான வளர்ச்சி வழிமுறையையும் தேர்வுகளையும் இது வினியோகித்தது.
சர்வதேச நியாயத்திற்கு ஆதரவு அளித்து, மேலாதிகத்தை எதிர்த்து, ஐ.நாவின் தகுநிலையைப் பேணிக்காக்கும் சீனா, நிதானத்தையும் வளர்ச்சியையும் பயன்படுத்தி, உலகிற்கு மேலதிகமான நலன்களையும் வாய்ப்புகளையும் வழங்குகின்றது. இதன் மூலம் எதிர்காலம் அனைவருக்கான சிறந்த எதிர்காலமாக மாற சீனா பாடுபட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.