ஸ்ரீ கம்பர் காளியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா!

மயிலாடுதுறை மாவட்டம், தேரழுந்தூர் பகுதியிலுள்ள ஸ்ரீ கம்பர் காளியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

தேரழுந்தூர் பகுதியில் ஸ்ரீ விநாயகர் , ஸ்ரீ ஏரிக்கரை மாரியம்மன் மற்றும் ஸ்ரீ கம்பர் காளியம்மன் உள்ளிட்ட கோவில்கள் அமைந்துள்ளது.

இக்கோவிலில் சித்திரைத் திருவிழாவை ஒட்டி பூச்செறிதல் மற்றும் சுவாமி வீதி உலா, பால்குடம் உள்ளிட்ட விழாக்கள் நடைபெற்றது.

முன்னதாக மேள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் கோயிலை வலம் வந்தனர். இதையடுத்து பக்தர்கள் அலகு குத்தியும், தீ மிதித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

You May Also Like

More From Author