திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மேல்பாதி ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத திருவோணம் மற்றும் ஏகாதசி உற்சவம் முன்னிட்டு மூல மூர்த்திகளுக்கு விசேஷ புஷ்பம், தளிகையுடன் கூடிய திருவாராதனம் நடைபெற்றது.
ஸ்ரீகைங்கர்யம் டிரஸ்ட் சார்பில் சார்பில் நடைபெற்ற இந்த வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் நடைபெற்றது. பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
