சீன-ஹங்கேரி அரசுத் தலைவர்கள் சந்திப்பு

ஹங்கேரியில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், மே 9ஆம் நாள் காலை புடாபெஸ்ட் நகரில் ஹங்கேரி அரசுத் தலைவர் தாமஸ் சுல்யோக்குடன் சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பில் ஷிச்சின்பிங் கூறுகையில்
சீன-ஹங்கேரி நட்புறவு, இரு நாட்டு மக்களின் மனதில் ஆழமாக வேரூன்றியுள்ளது. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புக்கு நிறைய சாதனைகள் கிடைத்துள்ளன. இவ்வாண்டு, சீன-ஹங்கேரி தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 75ஆம் ஆண்டு நிறைவாகும்.

பாரம்பரிய நட்புறவை தொடர்ந்து முன்னுக்கு எடுத்துச் சென்று, அரசியல் ரீதியான பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தி, பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்பை பலப்படுத்தி, இரு நாட்டுறவை மேலும் உயர் நிலைக்கு கொண்டு செல்ல அரசுத் தலைவர் சுல்யோக்குடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

You May Also Like

More From Author