சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 7ஆம் மற்றும் 8 ஆம் நாளில் சான்சி மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். மத்தியப் பகுதியின் பெரும் வளர்ச்சி, உயர் தர வளர்ச்சி ஆகியவை பற்றி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி வகுத்த நெடுநோக்குத் திட்டத்தை சான்சி மாநில அரசு செவ்வனே நடைமுறைப்படுத்தி, வளம் அடிப்படையிலான பொருளாதார மாற்றம் மற்றும் வளர்ச்சியில் புதிய முன்னேற்றங்களைப் பெற்று, சீனத் தேசத்தின் நவீனமயமாக்கத்தில் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
8ஆம் நாள் முற்பகல், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சான்சி மாநிலத்தின் கமிட்டி மற்றும் அரசின் பணியறிக்கையை அவர் கேட்டறிந்தார். இதில் அவர் கூறுகையில்,
பாரம்பரிய தொழில்களின் உற்பத்தித் திறன் மேம்பாட்டை உறுதியாக விரைவுபடுத்தி, புதிய தர உற்பத்தித் திறன்களை மையமாகக் கொண்டு நடைமுறை நிலைமைக்கு ஏற்ப புதிய மற்றும் எதிர்காலத் தொழில்களை வளர்க்க வேண்டும் என்றும், சான்சி தனிச்சிறப்புடைய உள்ளூர் மேம்பாடுகளைக் கொண்ட நவீனத் தொழில் அமைப்புமுறையை சான்சி மாநிலம் கட்டியமைக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.