சீன அரசுத் தலைவர்-நியூசிலாந்து தலைமையமைச்சர் சந்திப்பு

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 20ஆம் நாளன்று சீனாவில் பயணம் மேற்கொண்டிருக்கின்ற நியூலாந்து தலைமையமைச்சர் லுக்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இப்பேச்சுவார்த்தையின் போது ஷிச்சின்பிங் கூறுகையில், இரு நாட்டு உறவு நிறுவப்பட்ட 50க்கும் மேலான ஆண்டுகளில், இரு தரப்பும் எப்போதும் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து, கையோடு கை கோர்த்து, இரு நாடுகளின் மக்களுக்கு உண்மையான நலன்களை வழங்கியுள்ளது என்றார்.

மேலும், இரு தரப்புறவில் இரு தரப்புகளுடைய ஒத்துழைப்புக்கு முக்கிய தகுநிலையை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்ட ஷிச்சின்பிங், சர்வதேச நியாயம் மற்றும் நீதியைக் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும் எனத் தெரிவித்தார். அதோடு, சர்வதேச ஒழுங்குகளை மேலும் நியாயமாகவும் சரியாகவும் வளரும் வளர்ச்சி திசை நோக்கித் தூண்ட வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

சீனாவுடன் ஆக்கப்பூர்வமாகத் தொடர்பு கொண்டு, பல தரப்புவாத வர்த்தக அமைப்புமுறையைப் பேணிக்காத்து, உலகளவில் அறைகூவல்களைக் கூட்டாகச் சமாளிக்க வேண்டும் லுக்சன் விருப்பம் தெரிவித்தார்.

You May Also Like

More From Author