நட்புப் பரவல், ஒன்றுமை மேம்பாடு மற்றும் எதிர்காலத் திறப்புக்கான வெற்றி பயணம்

மே 5ஆம் நாள் முதல் 10ஆம் நாள் வரை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸ், செர்பியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் அரசுமுறை பயணம் மேற்கொண்டார்.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இப்பயணம் பற்றி செய்தியாளர்களிடம் எடுத்துக்கூறினார்.
வாங் யீ கூறுகையில், 5 நாட்களில் அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு பற்றிய 30க்கும் மேற்பட்ட பல்வகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மூன்று நாடுகளின் அரசு தலைவர்கள் ஷிச்சின்பிங்கின் இப்பயணத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, மிகவும் பிரமாண்டமான வரவேற்பை வழங்கினர்.

ஷிச்சின்பிங்கின் இப்பயணம், சீன-பிரான்ஸ் மற்றும் சீன-செர்பிய உறவை வலுப்படுத்துவதுடன், சீன-ஹங்கேரிய உறவையும் மேம்படுத்துகிறது. சீனா-ஐரோப்பிய ஒத்துழைப்பு மீண்டும் தொடங்குகிறது.

இப்பயணம், நட்புறவைத் தொடர்ந்து வளர்ப்பது, பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துவது மற்றும் எதிர்காலத்தைத் திறப்பது ஆகியவற்றுக்கு ஒரு வெற்றிப் பயணமாகும்.

You May Also Like

More From Author