சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் 10ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 11 திங்களில் சீனாவின் சரக்கு வர்த்தக இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் தொகை 39 இலட்சத்து 79 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.9 விழுக்காடு அதிகரித்து, நிதானமான வளர்ச்சி முன்னேற்றப் போக்கை நனவாக்கியுள்ளது.
விரிவான தரவுகளின்படி, சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் வளர்வதோடு, புதிய வளர்ச்சி முன்னேற்றப் போக்கு உள்ளது. வெளிப்புறக் கண்ணோட்டத்தில் பார்த்தால், தற்போதைய உலக சரக்கு வர்த்தகம் தொடர்ந்து மீட்சியடைந்து, பொருளாதாரத்தின் மீட்சிக்கான நிலையை உருவாக்கியுள்ளது. உள்புற கண்ணோட்டத்தில் பார்த்தால், சீனப் பொருளாதாரத்தின் அடிப்படை நிலைமை சீராக வருகிறது.
பரந்த சந்தை, வலிமையான வளர்ச்சி ஆற்றல், மாபெரும் உள்ளார்ந்த ஆற்றல் போன்றவற்றை தவிர, சமீபத்தில் சீன அரசு வழங்கியுள்ள தொடர்ச்சியான கொள்கையின் மூலம் வெளிநாட்டு வர்த்தகம் பெரிதும் அதிகரித்துள்ளது.
சீனப் பொருளாதாரத்தின் வலிமையான தன்மை மற்றும் உயிர் ஆற்றலை சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் நிதானமான வளர்ச்சியை வெளிகாட்டி, உலகத்திற்கு மேலதிகமான நன்மை மற்றும் நிதானத்தைக் கொண்டு வருகிறது. சீனாவின் வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியானது. வெளிநாட்டுத் திறப்பு வாய்ந்த உலகப் பொருளாதார அமைப்புமுறையைக் கட்டியமைக்க சீனா தொடர்ந்து முன்னேற்றி வருகிறது.