உலகப் பாசிச எதிர்ப்புப் போரின் வெற்றிக்குச் சீனா மிகப் பெரிய பங்களிப்பை ஆற்றியுள்ளதோடு, பெரும் தியாகத்தையும் செய்துள்ளது. இந்த முக்கியமான வரலாறு பற்றி உலகளாவிய நிலையில் மேலதிக மக்கள் அறிந்து கொள்ளச் செய்ய வேண்டுமென பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டி அளித்த போது தெரிவித்தனர்.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சோவியத் யூனியன் ஆகியவை ஜெர்மனி மற்றும் ஜப்பானின் பாசிச சக்தியை இறுதியில் தோற்கடித்த திறவுக்கோலாகுமென மேலை நாடுகளின் வரலாற்றுப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஒட்டுமொத்த நெடுநோக்கு ரீதியில் பார்க்கும் போது சீனாவும் மையமான பங்களிப்பை ஆற்றியுள்ளது என பிரிட்டனின் வரலாற்று அறிஞர் ராணா மிட்டர் வலியுறுத்திக் கூறினார்.