பகவதியம்மன் கோவில் வைகாசித்திருவிழா கொடியேற்றம்!

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக மேளதாளங்கள் முழங்க கொடிப்பட்டமும், கொடிமரக்கயிறும் ஆலயத்தில் ஒப்படைக்கப்பட்டு கொடிமரத்திற்கு அபிஷேகங்கள், விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு கொடியேற்றப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 10 நாட்கள் விசாகத்திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது.

You May Also Like

More From Author