சீனா கட்டியமைத்த பத்மா பால இருப்புப் பாதை திறப்பு
வங்காளதேசத்தில் சீனா கட்டியமைத்த பத்மா பால இருப்புப் பாதையின் முதலாவது பகுதி செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
வங்காளதேசத்தில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் கீழ் கட்டியமைக்கப்பட்ட திட்டங்களில் பத்மா பாலம் ராய்-1 இணைப்புத் திட்டம் முக்கியமானதாகும். இந்த இருப்புப்பாதை திட்டப் பணிக்கு சீன ஏற்றுமதி-இறக்குமதி வங்கி நிதி அளித்துள்ளது. சீன ரயில்வே குழுமம் லிமிடெட் நிறுவனம் கட்டியமைத்தது குறிப்பிடத்தக்கது.
டாக்கா முதல் பாங்கா வரையிலான முதல் பகுதி இருப்புப் பாதையின் நீளம் 80 கிலோ மீட்டர். 172 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த இருப்புபாதை வங்கதேசத்தின் தென்மேற்குப் பகுதி வரை செல்கிறது.