சீனாவின் முதல் ஹைட்ரஜன் ஆற்றல் கப்பலின் முதல் பயணம் வெற்றி

சீனாவின் முதலாவது ஹைட்ரஜன் மின்கலம் பயன்படுத்தும் முன்மாதிரி கப்பலான சான்சியா ஹைட்ரஜன் கப்பல்-1, அக்டோபர் 11ஆம் நாள் யாங்ச்சி ஆற்றின் மூ மலை பள்ளத்தாக்கின் துவக்கப் புள்ளியான ஹுபெய் மாநிலத்தின் யீசாங் நகரில் முதல் பயணத்தைத் தொடங்கியது. உள்நாட்டு ஆற்றில் பயணிக்கும் கப்பலில் ஹைட்ரஜன் மின்கலத் தொழில் நுட்பத்தின் பயன்பாடு முன்பு இல்லாத முன்னேற்றம் அடைந்துள்ளதை இது காட்டுகிறது.
உள்நாட்டு ஆற்றில் கப்பல் போக்குவரத்து துறையின் கார்பன் குறைந்த பசுமையான வளர்ச்சிக்கு இக்கப்பலின் வெற்றிகரமான முதல் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. புதிய வளர்ச்சிக் கருத்தைச் செயல்படுத்துவதற்கும், கார்பன் உச்சநிலை மற்றும் நடுநிலை இலக்குகளை நிறைவேற்றுவதற்கும் இது சிறந்த நடைமுறையாகும்.
49.9 மீட்டர் நீளம், 10.4 மீட்டர் அகலம், 3.2 மீட்டர் உயரம் ஆகியவை கொண்ட இக்கப்பலில் 80 பயணிகள் பயணிக்க முடியும். அதிகப்பட்ச பயண வேகம் மணிக்கு 28 கிலோமீட்டராகும். மின்கல ஆற்றல் முழுமையாக இருக்கும் நிலையில் அது 200 கிலோமீட்டர் வரை பயணிக்கும்.

Please follow and like us:

You May Also Like

More From Author