மாலத் தீவு, உலகளவில் விடுமுறையை கழிப்பதற்காக புகழ்பெற்ற சுற்றுலா இடமாகும். ஆனால், முன்னதாக இந்நாட்டில் பாலம் இல்லை என்ற பிரச்சினை நிலவியது.
பல்வேறு தீவுகளுக்கிடையில் வந்துச் செல்லும் ஒரேயொரு போக்குவரத்து வசதி, கப்பல் தான். தீவிர வானிலை நிகழ்வு ஏற்பட்டால், போக்குவரத்து துண்டிக்கப்படும். கடல் பாலத்தின் மூலம், தலைநகர் மாலேவு, விமான நிலையம், அருகிலுள்ள தீவுகள் ஆகியவை ஒன்றாக இணைக்கப்படுவது என்பது இந்நாட்டு மக்களின் கனவாகும்.
ஆழ்கடல் பவளப் பாறைப் பகுதியிலேயே, கடல் பாலம் ஒன்றைக் கட்டியமைப்பது, உலகளவில் முன்கண்டிராதது.
2014ஆம் ஆண்டின் செப்டம்பர் திங்கள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மாலத்தீவில் அரசுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, மாலே விமான நிலையத் தீவுக்கான கடல் பாலம் ஒன்றை கட்டியமைக்க இரு நாடுகள் கலந்தாய்வு மூலம் தீர்மானித்தன. மேலும், இப்பாலத்திற்கு சீன-மாலத்தீவு நட்புப் பாலம் என பெயர் சூட்டப்பட்டது.
2018ஆம் ஆண்டின் ஆக்ஸ்ட் 30ஆம் நாள், மாலத்தீவில் முதலாவது கடல் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. அதே நாள், ஆயிரக்கணக்கான மோட்டார் வாகனங்களில் உள்ளூர் மக்கள் இப்பாலத்தின் திறப்பை கண்டு மகிழ்ந்தனர்.
மாலத்தீவின் 3 தீவுகளை இப்பாலம் இணைத்துள்ளது. மாலத்தீவு தலைநகரின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் முக்கிய போக்குவரத்து வழியாகவும் இப்பாலம் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.