ஷிச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய போது கூறுகையில், சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த நவீனத் தொழில் நிறுவனங்களின் அமைப்பு முறையை மேம்படுத்தும் வகையில், சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோசலிச அமைப்பின் நன்மைகளைப் பயன்படுத்த வேண்டும். தொழில் நிறுவனங்கள் நவீன நிறுவன அமைப்புகளை நிறுவவும் மேம்படுத்தவும் வேண்டும். உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களை வளர்க்க வேண்டும் என்றார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் சீர்திருத்தத்தைப் பன்முகங்களிலும் ஆழமாக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் மத்திய ஆணையத்தின் துணைத் தலைவருமான லீ ச்சியாங், வாங் ஹுனிங், ட்சாய் ச்சி ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.