அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அண்மையில் ரெனாய் பாறை பிரச்சினை தொடர்பாக வெளியிட்ட கருத்துகள் குறித்த கேள்விகளுக்குப் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் பதிலளிக்கையில், ரெனாய் பாறை, பண்டைகாலம் தொட்டு, சீனாவுக்குரிய உரிமைப் பிரதேசமாகும். 1999ஆம் ஆண்டு, பிலிப்பைன்ஸ் இராணுவக் கப்பல் ஒன்றை இப்பாறைக்கு அனுப்பி வைத்தது. இந்த ராணுவக் கப்பலை பிலிப்பைன்ஸ் உடனடியாக இழுத்துச் செல்ல வேண்டும் என்று சீனா கடும் எதிர்ப்புடன் கோரிக்கை விடுத்தது. பிலிப்பைன்ஸ் தரப்பு இக்கப்பலை இழுத்துச் செல்ல வாக்குறுதியளித்துள்ள போதிலும் தொடர்புடைய செயலை நடைமுறைப்படுத்தவில்லை. ஆகஸ்ட் 5ஆம் நாள், சீனத் தரப்பின் வற்புறுத்தல் மற்றும் எச்சிரிக்கையைப் பொருட்படுத்தாமல், பிலிப்பைன்ஸ் 2 கப்பல்களை இப்பாறைக்கு அனுப்பி, முந்தைய இராணுவக் கப்பலை செப்பனிடும் பொருட்களை இறக்கி வைத்தது. இச்செயல், சீனாவின் இறையாண்மையை ஊறுபடுத்தியது. சீனக் கடற் காவற்துறையின் படகு இச்செயலை சட்டப்படி தடுப்பது நியாயமானது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் உண்மையை புறக்கணித்து, அறிக்கையை வெளியிடுவதன் மூலம், சீனத் தரப்பின் சட்டப்பூர்வமான நடவடிக்கையைத் தாக்குவதை சீனா உறுதியுடன் எதிர்க்கிறது என்று தெரிவித்தார்