சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், டிசம்பர் 2ஆம் நாள், லாவோஸ் மக்கள் ஜனநாயக குடியரசு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, லாவோஸ் மக்கள் புரட்சிக் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான தொங்லூனுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
இதில் ஷிச்சின்பிங் கூறுகையில்,
லாவோஸ் மக்கள் புரட்சிக் கட்சியின் தலைமையில், லாவோஸ் மக்கள் ஒன்றுபட்டு, மனம் ஒருமித்து கடினமாக உழைத்து, இன்னல்களைச் சமாளித்து, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு இலட்சியத்தில் அதிகமான சாதனைகளைப் பெற்றுள்ளனர். மக்களின் வாழ்க்கை தொடர்ந்து மேம்பட்டு, சர்வதேச மற்றும் பிராந்திய பகுதியில் செல்வாக்கு பெரிதும் உயர்ந்துள்ளது. சொந்த நாட்டின் நிலைமைக்கு ஏற்ப, சோஷலிச பாதையில் ஊன்றி நின்று, லாவோஸ் மக்கள் புரட்சிக் கட்சியின் 12ஆவது தேசிய மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று, கட்சி மற்றும் நாட்டின் கட்டுமான இலட்சியத்தின் புதிய நிலைமையை தொடர்ந்து படைக்க விரும்புகின்றேன் என்றார்.
இவ்வாண்டின் செப்டம்பர் திங்களில், தோழர் தொங்லூன் சீனாவில் வெற்றிகரமாக பயணம் மேற்கொண்டார். சீன-லாவோஸ் பொது எதிர்கால சமூக கட்டுமானம் குறித்து நாங்கள் இருவரும் நெடுநோக்கு ரீதியில் புதிய ஒத்த கருத்துக்களை ஆழமாக்கியுள்ளோம். லாவோஸுடன் இணைந்து, பாரம்பரிய நட்புறவை வலுப்படுத்தி, ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் ஆழமாக்கி, புதிய யுகத்தில் இரு தரப்புகளின் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பை மேலும் முன்னேற்றி, இரு நாடுகளின் மக்களுக்கு மேலதிகமான நன்மைகளைக் கொண்டு வந்து, பிராந்திய மற்றும் உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு மேலும் முக்கிய பங்காற்ற வேண்டும் லஎன்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.
