பிரேசில் கூட்டாட்சி குடியரசு தலைவர் லூலா அழைப்பின் பேரில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 17ம் நாள் மாலை, சிறப்பு விமானம் மூலம் ரியோ டி ஜெனிரோவைச் சென்றடைந்தார். அவர், ஜி20 அமைப்பு தலைவர்களின் 19வது உச்சிமாநாட்டில் பங்கெடுக்கவும், பிரேசில் அரசு முறை பயணம் மேற்கொள்ளவும் உள்ளார்.
ஷிச்சின்பிங் விமான நிலையத்தில் எழுத்து மூலம் உரை நிகழ்த்துகையில், சீன-பிரேசில் இடையே ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கை ஆழமாகி வருகிறது. மனித தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பயன் தரும் ஒத்துழைப்புகளில் செழுமையான சாதனைகள் பெறப்பட்டுள்ளன. இரு நாடுகளின் பாரம்பரிய நட்பு, புத்துயிர் பெற்று வருவதாக தெரிவித்தார். இருநாடுகள், சர்வதேச அரங்கில், தெற்கு உலக நாடுகளின் கருத்துகளைத் தெரிவித்து, உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகின்றன என்று தெரிவித்தார்.
லூலாவுடன் இணைந்து சீன-பிரேசில் உறவை மேலும் மேம்படுத்தவும், இரு நாட்டின் வளர்ச்சி நெடுநோக்கு இணைப்பு, பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் முதலியவை குறித்து இருதரப்பும் மேலும் ஆழமாக கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறேன். ஜி20 அமைப்பின் தலைவர்கள் உச்சிமாநாட்டில் பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பின் முக்கிய மேடையாக கொண்டு, இவ்வமைப்பின் பங்குகளைத் தொடர்ந்து தூண்ட விரும்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவைச் சென்றடைந்த ஷிச்சின்பிங்
