2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரு மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியாவில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அந்த நாட்டு வாரியத்திற்கு ஒரு கிடுக்கிப்பிடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வரும் ஜனவரி 21 ஆம் தேதிக்குள் வங்கதேசம் தனது இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்துள்ளது.
டி20 உலகக்கோப்பை 2026: வங்கதேசத்திற்கு ஐசிசி கெடு; இந்தியா வர மறுத்தால் வெளியேற்றம்
Estimated read time
0 min read
