சீன திரைப்படங்களின் வெளிநாட்டுத் திரையிடல் நடவடிக்கை தென்னாப்பிரிக்காவில் துவங்கியது

Estimated read time 1 min read

ரீல் சீனா எனும் சீனத் திரைப்படங்களின் வெளிநாட்டுத் திரையிடல் நடவடிக்கையின் பரவல் நிகழ்வு தென்னாப்பிரிக்காவின் ஜோன்னெஸ்பேர்கில் நடைபெற்றது.

இதில் தென்னாப்பிரிக்காவுக்கான சீனத் தூதர் வூ பெங், தென்னாப்பிரிக்காவின் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகள், பண்பாட்டுத் துறை, செய்தி ஊடகத் துறை, இளம் மாணவர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சீனத் திரைப்படப் பணியகத்தின் ஆதரவுடன், சீன செய்தி ஊடக குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நடவடிக்கை, 2026 சீன-ஆப்பிரிக்க மானிட பரிமாற்ற ஆண்டின் கோட்பாட்டின் கீழ் நடைபெறும் முக்கிய பண்பாட்டுப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

தென்னாப்பிரிக்க மூத்த ஊடக நிபுணர் பெய்லி தனது உரையில் கூறுகையில், ரீல் சீனா என்ற நடவடிக்கை, இரு தரப்புகளுக்கிடையிலான புரிந்துணர்வை ஆழமாக்கி, தென்னாப்பிரிக்க ரசிகர்களுக்கு உண்மையான சீனாவைக் காட்டுகிறது என்று கூறினார்.

You May Also Like

More From Author