சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
Category: தமிழ்நாடு
சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ‘மோந்தா’ (Montha) என்ற புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) [மேலும்…]
துணை ஜனாதிபதி வருகை : கோவையில் டிரோன் பறக்க 4 நாட்கள் தடை..!
துணை ஜனாதிபதி சி.பிராதாகிருஷ்ணன் 2 நாட்கள் பயணமாக நாளை தமிழகம் வர உள்ளார். நாளை கோவை சி.பி.ராதாகிருஷ்ணன் கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் பாராட்டு [மேலும்…]
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி
பத்து நாட்களுக்குப் பிறகு குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தென்காசி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை [மேலும்…]
50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!
2025 குறுவை நெல் சாகுபடிக்கான கொள்முதல் எதிர்பார்த்ததை விட 50 சதவீதம் மட்டுமே நடந்துள்ளது என்பது புள்ளி விவரங்களின் படி தெரியவந்துள்ளது. திருச்சி மாவட்டம் [மேலும்…]
பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
பாமகவின் செயல் தலைவராக காந்திமதியை நியமித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமகவின் நிறுவனர் ராமதாஸ்க்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில [மேலும்…]
நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!
நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வியடைந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 60 [மேலும்…]
வலுவடையும் மொந்தா புயல்; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் [மேலும்…]
மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு!
மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 [மேலும்…]
மதுரையில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை –
மதுரை மாநகரில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மதுரையில் சிம்மக்கல், கோரிப்பாளையம், புதூர், செல்லூர், மாட்டுத்தாவணி [மேலும்…]
வரும் 27ம் தேதி, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்..!!
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நேற்று காலை 5:30 மணிக்கு [மேலும்…]
