நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலில் இருந்து புறப்பட்டது. விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார்.
அவரது உடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக இன்று காலை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பிரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி முடித்த நிலையில், விஜயகாந்தின் இறுதி ஊர்லவம் தீவுத்திடலில் இருந்து புறப்பட்டிருக்கிறது.
இந்த ஊர்வலம் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நிறைவடைகிறது. பின்னர், மாலை 4.45 மணிக்கு மேல் அரசு மரியாதையுடன் அங்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இதில், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில், விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் ஈ.வெ.ரா. சாலை வழியாக நடைபெறும் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்திருக்கிறது.
ஆகவே, ஈ.வெ.ரா. சாலை வழியாக செல்ல பிற வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இறுதி ஊர்வலம் முடியும் வரை பொதுமக்கள் ஈ.வெ.ரா. சாலையை தவிர்க்குமாறு போக்குவரத்து காவல்துறை கேட்டுக் கொண்டிருக்கிறது.
https://www.youtube.com/live/CeVDKzmwbYE?si=qRR-soBfWBV2j0-x