சீனத் தேசிய அறிவியல் தொழில் நுட்ப மாநாட்டில் ஷிச்சின்பிங்கின் உரை

சீனத் தேசிய அறிவியல் தொழில் நுட்ப மாநாடு, சீனத் தேசிய அறிவியல் தொழில்நுட்ப விருது வழங்கும் மாநாடு, சீன அறிவியல் கழகம் மற்றும் சீனப் பொறியியல் கழகத்தைச் சேர்ந்த மூத்த அறிஞர் மாநாடு ஆகியவை ஜூன் 24ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் நடைபெற்றன.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தேசிய மிக உயர்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருது வென்றவர்களுக்கு விருதுகளை வழங்கி முக்கிய உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், அறிவியல் தொழில் நுட்பத்தின் செழுமை,  தேசிய இனத்தின் செழுமைக்கு வழிவகுக்கிறது. அறிவியல் தொழில்நுட்பம் வலுவாக இருந்தால், நாடு வலுவாக இருக்கும். சீனப் பாணி நவீனமயமாக்கம், அறிவியல் தொழில்நுட்ப நவீனமயமாக்கலைச் சார்ந்தது. உயர்தர வளர்ச்சியை அடைவது, புதிய இயக்க ஆற்றலை வளர்த்த அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்கத்தைச் சார்ந்தது.

அறிவியல் தொழில்நுட்பத்தின் தலைமை தகுநிலை மற்றும் அடிப்படை ஆதரவு பங்குகளை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். 2035ஆம் ஆண்டில் அறிவியல் தொழில்நுட்ப வல்லரசை உருவாக்குவதற்கான நெடுநோக்கு குறிக்கோளை நனவாக்க வேண்டும்.

உயர்மட்ட வடிவமைப்பு மற்றும் ஒட்டுமொத்த திட்டத்தை வலுப்படுத்தி, உயர்நிலை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையில் தன்னம்பிக்கையையும் சுய முன்னேற்றத்தையும் நனவாக்குவதை விரைவுபடுத்த வேண்டும் என்றார்.

You May Also Like

More From Author