சீனாவின் மனிதரை ஏற்றிச் செல்லும் விண்வெளித் திட்டப்பணி அலுவலகம் அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பின் படி, சந்திர மண்டல ஆய்வுக்கான விண்வெளி உடை மற்றும் மனிதரை விண்ணுக்கு அனுப்பும் சந்திர ரோவர் ஆகியவை தற்போது ஆரம்ப மாதிரி தயாரிப்புக் கட்டத்தில் முழுமையாக நுழைந்துள்ளன.
பல்வேறு பணிகள் சுமூகமாக நடைபெற்று வருகிறன. விண்வெளி உடைக்கு “வாங்யூ” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சந்திர ரோவருக்கு “டான் சோ” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
திட்டப்படி, 2030-ஆம் ஆண்டுக்குள் மனிதரை சந்திரனில் தரையிறக்குவதைச் சீனா நனவாக்கி, சந்திர அறிவியல் ஆய்வு மற்றும் தொடர்புடைய தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொள்ளும். பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் போய் வருவது, சந்திரனில் குறுகிய கால முகமிடுவது, மனித-இயந்திரம் இணைந்து ஆய்வு செய்வது உள்ளிட்டவ துறைகளில் சீனா முக்கிய முன்னேற்றம் அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.