2024ஆம் ஆண்டிலிருந்து சீனாவின் தொழில்துறை செயல்பாட்டில் நிலையான முன்னேற்றம் அடைந்து வருகின்றது.
இது, ஒட்டுமொத்த பொருளாதாரத்தை நிதானப்படுத்துவதில் அடிச்சுவை போன்ற பங்கு ஆற்றி வருகின்றது என்று சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
சீனப் பொருளாதாரத்தின் உயர்தர வளர்ச்சி சாதனைகள் குறித்து சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் 21ஆம் நாள் பெய்ஜிங்கில் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் இந்த பொறுப்பாளர் கூறுகையில், 2024ஆம் ஆண்டில் சீனாவில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் கூட்டு மதிப்பு தொகை, 2023ஆம் ஆண்டை விட 5.8விழுக்காடு அதிகமாகும். சீனத் தயாரிப்பு தொழிற்துறையின் மொத்த அளவு தொடர்ந்து 15ஆண்டுகளாக உலகளவில் முதலிடத்தில் உள்ளது என்று தெரிவித்தார்.