சீனாவின் 2025 கோடைகாலத் திரைப்பட வசூல் 1,196 கோடி யுவானை (சுமார் 1.68 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) எட்டியது. இது கடந்த ஆண்டின் கோடைகாலத்தில் இருந்ததை விட அதிகம் என்று சீனத் திரைப்பட நிர்வாகம் திங்கள்கிழமை தெரிவித்தது
சீனாவில் கடந்த ஆண்டு கோடை காலத்தில் வெளியான வரலாறு, அனிமேஷன், நகைச்சுவை, அதிரடி மற்றும் துப்பறியும் கதைகள் கொண்ட 100 க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின. இது மொத்தம் 32.1 கோடி ரசிகர்களை ஈர்த்துள்ளதாக சீனத் திரைப்பட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் கோடைகால திரைப்பட சீசன் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை நடைபெறுகிறது. இது நாட்டின் மிகவும் லாபகரமான திரைப்பட காலங்களில் ஒன்றாகும். கோடைகாலத்தில் அதிக வசூல் பெற்ற திரைப்படம் “டெட் டு ரைட்ஸ்” ஆகும், இது இரண்டாம் உலகப் போரின் போது 1937 ஆம் ஆண்டு கிழக்கு சீனாவில் நான்ஜிங் படுகொலை பற்றி எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
இந்த திரைப்படம் ஜூலை 25 அன்று வெளியானதிலிருந்து 289 கோடி யுவான் வசூல் பெற்றுள்ளது. மேலும், “யாவோ-சீன நாட்டுப்புறக் கதைகளை” பின்னணியாக கொண்ட அனிமேஷன் தொடரின் ஒரு பகுதியான “நோபாடி”; ஜாக்கி சான் நடித்த குற்ற நடவடிக்கை படமான “தி ஷேடோஸ் எட்ஜ்”; டாங் வம்சத்தின் (618-907) காலகட்டத்தில் நகைச்சுவை நடிகர் டா பெங் நடித்த “தி லிச்சி ரோடு”; மற்றும் யுனிவர்சலின் “ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த்” ஆகிய திரைப்படங்களும் 2025 கோடையில் அதிக வசூல் சாதனை பெற்றுள்ளது.