சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 10ஆம் நாள் மாலை மக்கள் மாமண்டபத்தில், சீனாவில் அதிகாரப்பூர்வமாகப் பயணம் மேற்கொண்டுள்ள சாலமன் தீவுகள் தலைமை அமைச்சர் சோக்கவாரேயைச் சந்தித்துரையாடினார். சீனாவும், சாலமன் தீவுகளும், புதிய யுகத்தில் ஒன்றுக்கொன்று மதிப்பளித்து, கூட்டு வளர்ச்சியுறும் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவை உருவாக்குவதாக, இருத்தரப்பினரும் இச்சந்திப்புக்குப் பின் அறிவித்தனர்.