விசா விலக்குக் கொள்கைக்குரிய நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியாவைச் சேர்ப்பதாக சீனா ஜுன் 17ஆம் நாள் அறிவித்தது.
அன்று சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் ஆஸ்திரேலிய தலைமை அமைச்சர் அந்தோணி அல்பனீஸுடன் கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த முடிவை தெரிவித்தார்.
மேலும், ஜுன் 13ஆம் நாள் சீனாவும் நியூசிலாந்தும் வெளியிட்ட கூட்டறிக்கையில், சீனா நியூசிலாந்துக்கு விசா விலக்கு கொள்கையை அமலாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் வெளியிட்ட பிறகு, சிட்ரிப் இணையதளத்திலேயே நியூசிலாந்தின் பயணிகள் சீனா தொடர்பாக தேடியது முந்தைய நாளில் இருந்த்தை விட 65 விழுக்காடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.