சீன-போலந்து அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை
சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட போலந்து அரசுத் தலைவர் ஆண்ட்ரஸெஜ் துடாவுடன், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுன் 24ஆம் நாள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில்,
போலந்து, சீன மக்கள் குடியரசை மிக முன்னதாகவே அங்கீகரித்த நாடுகளில் ஒன்றாகும். சீன-போலந்து தூதரக உறவு நிறுவப்பட்ட 75 ஆண்டுளில் இரு நாட்டுறவு எப்போதும் சீராக வளர்ந்து வருகிறது. பாரம்பரிய நட்புறவைத் தொடர்ந்து வளர்த்து, இரு நாட்டுறவை உயர் நிலைக்கு கொண்டு செல்ல சீனா போலந்துடன் இணைந்து பணியாற்றும் என்று தெரிவித்தார்.
மேலும், போலந்து குடிமக்களுக்கு 15 நாட்கள் வரை விசா விலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்த சீனா முடிவெடுத்துள்ளதாகவும் ஷிச்சின்பிங் பேச்சுவார்த்தையின்போது தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு நாட்டுத் தலைவர்களின் முன்னிலையில், பொருளாதார வர்த்தகம், வேளாண்மை உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த இரு தரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.