சீனாவின் தூதாண்மைக் கொள்கைக்கான திசைக்காட்டி என கருதப்படும் வெளி விவகாரப் பணி பற்றிய மத்திய கூட்டம் ஐந்தரை ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாண்டின் இறுதியில் மீண்டும் நடத்தப்பட்டது.
மாறி வரும் சிக்கலான சூழ்நிலையில், சீனத் தலைவர்கள் தூதாண்மை கொள்கையை எப்படி வகுப்பது, சீனாவின் வெளியுறவுத் துறை எந்த முயற்சி மேற்கொள்வது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்கள் இக்கூட்டத்தில் பெற முடியும்.
இவ்வாண்டு, மனிதகுலத்துக்குப் பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவது என்ற முன்மொழிவை சீனா முன்வைத்த 10ஆவது ஆண்டு நிறைவாகும். நடப்புக் கூட்டத்தில் இம்முன்மொழிவு பற்றி முழுமையான மற்றும் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டதோடு, சீனாவின் எதிர்கால தூதாண்மை பணி தொடர்ந்து இம்முன்மொழிவைச் சூழ்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெளிவான இலக்கு தவிர, இன்னல்கள் மற்றும் சவால்களைச் சமாளிப்பதற்கான வழிமுறைகளும் தேவைப்படுகின்றன. குறிப்பிட்ட மேலை நாடுகள், மேலாதிக்கம், பகைமை, புதிய பனிப்போர், பாதுகாப்புவாதம், தடை நடவடிக்கை முதலியவற்றை ஏற்படுத்தி வரும் பின்னணியில், சமமான மற்றும் ஒழுங்கான பல துருவ உலகம், அனைவருக்கும் நன்மை தரும் உலகமயமாக்கப் பொருளாதாரம் ஆகிய 2 முன்னெடுப்புகளை சீனா இக்கூட்டத்தில் முன்வைத்துள்ளது.
மேலும், 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல், புதிய உறுப்பினர்களை பிரிக்ஸ் அமைப்பு வரவேற்க உள்ளது. உலகளவில் வளரும் நாடுகளின் ஆற்றல் மேலும் வலுவடையும். பரந்தபட்ட வளரும் நாடுகளுடன் சீனா தொடர்ந்து ஒன்றுபட்டு, உண்மையான பலதரப்புவாதத்தைச் செயல்படுத்தி, வர்த்தகம் மற்றும் முதலீட்டின் தாராளமயமாக்கத்தையும் வசதிமயமாக்கத்தையும் உறுதியுடன் முன்னேற்றும்.
உலக நிர்வாகத்தை முழுமைப்படுத்துவதற்கும், உலக அமைதி மற்றும் வளர்ச்சியைப் பேணிக்காப்பதற்கும் சீனா மேலும் பெரும் பங்காற்றும்.